/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
/
பழவேற்காடில் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
பழவேற்காடில் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
பழவேற்காடில் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : பிப் 20, 2025 09:49 PM
பழவேற்காடு:பழவேற்காடு மீனவப்பகுதிகளில் பல்வேறு துறைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பழவேற்காடு பகுதியை சுற்றுலாத்தளமாக மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, சுற்றுலா, மீன்வளம் மற்றும் வனம் ஆகிய துறையினருடன், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும் எனவும், சுற்றுலாப் பயணியர் வந்து செல்லும் பழவேற்காடின் முக்கிய இடங்களில் தெருவிளக்குகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
டச்சு கல்லறை தோட்டத்தை பார்வையிட்டு, துாய்மையாக வைத்திருக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
கோட்டைகுப்பம் ஊராட்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை பார்வையிட்டார். அவற்றை மதிப்புகூட்டி சந்தைப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை, மாவட்ட நிர்வாகம் செய்யும் என உறுதியளித்தார்.
மீன்வளத் துறை சார்பில், ஆறு கோடி ரூபாயில் கட்டடப்படும், மீன் இறங்குதள கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை துரிதமாக முடிக்க அறிவுத்தினார்.
தத்தமஞ்சி கிராமத்தில், 20 கோடி ரூபாயில் ஆரணி ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்ட வெள்ள தடுப்பு சுவரை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, பொன்னேரி வட்டாட்சியர் சிவகுமார், மீன்வளத் துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் உட்பட பலர் உடனடிருந்தனர்.