/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகள்

ADDED : டிச 31, 2024 01:14 AM

கடம்பத்துார், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் இரவு, பகல் பாராமல் நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.
இதனால், இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகின்றன.
இதுகுறித்து பகுதிவாசிகள் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், வருவாய், ஊராட்சி துறையினருடன், பேரூராட்சி, நகராட்சி ஆகிய துறைகள் இணைந்து, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இந்த தகவலை வாரம்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அனைத்து நெடுஞ்சாலைகளிலும் ஆய்வு செய்து கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.