/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விரைவு ரயிலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி
/
விரைவு ரயிலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி
ADDED : அக் 04, 2024 02:33 AM

பொன்னேரி,:பொன்னேரி அடுத்த பெரியகாவணம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சத்ரியன், 21. இவர், மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்தார்.
நேற்று காலை 8:00 மணிக்கு, கல்லுாரி செல்வதற்காக வீட்டின் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற விரைவு ரயிலில் சிக்கினார்.
இதில், பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார் சத்ரியனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

