/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் - லாரி மோதல் கல்லுாரி மாணவர் பலி
/
பைக் - லாரி மோதல் கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜன 01, 2025 09:34 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, வெள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சந்தோஷ், 18. பொன்னேரியில் உள்ள எல்.என்., அரசு கல்லுாரியில், பி.ஏ., வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம், 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில், தாயார் கீதா என்பவருடன், ராமன்தண்டலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
பீமன்தோப்பு பகுதியில் சென்றபோது முன்னால் எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற, 'அசோக்லைலண்ட் டாரஸ்' லாரி திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்டு பின்னால் வந்தது.
இதனால் நிலை தடுமாறிய சந்தோஷ், விழுந்தததில் லாரி சந்தோஷின் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தார். தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தாயார் கீதா அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

