/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் சீசன் முடிந்தும் உலா வரும் வர்ண நாரைகள்
/
பழவேற்காடில் சீசன் முடிந்தும் உலா வரும் வர்ண நாரைகள்
பழவேற்காடில் சீசன் முடிந்தும் உலா வரும் வர்ண நாரைகள்
பழவேற்காடில் சீசன் முடிந்தும் உலா வரும் வர்ண நாரைகள்
ADDED : ஜூன் 02, 2025 11:29 PM

பழவேற்காடு, பழவேற்காடு சரணாலய பகுதியில் பூநாரை, வர்ணநாரை, கூழைக்கடா, கடல்பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் என, பல்வேறு வகையான பறவை இனங்கள் வலசை வந்து செல்கின்றன.
இங்கு, நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை, பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன. இந்த ஆண்டும் ஏராளமான பறவைகள் பழவேற்காடு ஏரியில் குவிந்தன.
நடப்பாண்டு கணக்கெடுப்பின்படி, 151 வகையான, 40,000க்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன. தற்போது சீசன் முடிந்தும், வர்ணநாரைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை சதுப்பு நிலங்கள், மீன் இறங்குதளம், பகிங்ஹாம் கால்வாய், பழவேற்காடு ஏரியின் அருகில் உள்ள கிராமங்களின் நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
சீசன் முடிந்தாலும், வர்ணநாரை, பூநாரை, கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள், பழவேற்காடு சரணலாய பகுதியில் இருக்கும் என, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.