/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பார்க்கிங்' வசதியற்ற வணிக வளாகங்கள் பூந்தமல்லி டிரங்க் சாலையில் நெரிசல்
/
'பார்க்கிங்' வசதியற்ற வணிக வளாகங்கள் பூந்தமல்லி டிரங்க் சாலையில் நெரிசல்
'பார்க்கிங்' வசதியற்ற வணிக வளாகங்கள் பூந்தமல்லி டிரங்க் சாலையில் நெரிசல்
'பார்க்கிங்' வசதியற்ற வணிக வளாகங்கள் பூந்தமல்லி டிரங்க் சாலையில் நெரிசல்
ADDED : அக் 26, 2024 03:21 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 80,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நகராட்சியின் பிரதான சாலையாக, பூந்தமல்லி டிரங்க் சாலை உள்ளது.
இந்த சாலையில் நகராட்சி அலுவலகம், நீதிமன்றம், சார் - பதிவாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், பேருந்து நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன.
மேலும் இரண்டு திரையரங்கம், நகைக்கடை, துணிக்கடை, உணவகம் உள்ளிட்ட 1,000த்துக்கும் மேற்பட்ட வணிக கடைகள் அமைந்துள்ளன.
இந்நிலையில், இந்த சாலையில் உள்ள 98 சதவீத கட்டடங்களில், வாகன நிறுத்தம் இல்லை. விதிமுறைகளை மீறி, வாகன நிறுத்தம் வசதியின்றி, இந்த வணிக வளாகங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதனால், இந்த கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது இந்த சாலையில் மேட்ரோ மேம்பாலம் கட்டுமான பணி நடைபெறும் நிலையில், வணிக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால், கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
வாகன நிறுத்தத்திற்கு இடம் இல்லாமல், விதிமுறையை மீறிய கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.