/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுபான்மையினர் மக்களுடன் ஆணைய தலைவர் கலந்தாய்வு
/
சிறுபான்மையினர் மக்களுடன் ஆணைய தலைவர் கலந்தாய்வு
ADDED : ஜன 30, 2025 10:53 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், சிறுபான்மையினர் மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
கலெக்டர் பிரபுசங்கர், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் இதுவரை, 16 மாவட்டங்களில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளோம்.
நாங்கள் பெற்ற 489 கோரிக்கை மனுக்களில், 302 மீது தீர்வு கண்டுள்ளோம். திருவள்ளூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், சிறுபான்மையினர் தெரிவித்த கோரிக்கைகளை, அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், 55 பயனாளிகளுக்கு, 7.53 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் சம்பத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், சிறுபான்மையினர் நல இயக்க துணை இயக்குனர் ஷர்மிளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

