/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு
/
திருவள்ளூர் நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : மே 28, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகராக உள்ள திருவள்ளூரில் சாலை, கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னை உள்ளது.
மேலும், பல்வேறு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவற்றை நிர்வகிக்கும் கமிஷனர் பணியிடம் மூன்று மாதங்களாக காலியாக இருந்தது.
தற்போது, திருவாரூர் நகராட்சி கமிஷனர் தாமோதரன் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய கமிஷனருக்கு நகராட்சி தலைவர் உதயமலர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.