/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறநகர் ரயிலில் சிக்கி மாடு பலி ஒரு மணி நேரம் பயணியர் தவிப்பு
/
புறநகர் ரயிலில் சிக்கி மாடு பலி ஒரு மணி நேரம் பயணியர் தவிப்பு
புறநகர் ரயிலில் சிக்கி மாடு பலி ஒரு மணி நேரம் பயணியர் தவிப்பு
புறநகர் ரயிலில் சிக்கி மாடு பலி ஒரு மணி நேரம் பயணியர் தவிப்பு
ADDED : செப் 01, 2025 01:31 AM

மீஞ்சூர்:கும்மிடிப்பூண்டியில், இருந்து, சென்னை நோக்கி சென்ற புறநகர் ரயிலில் மாடு சிக்கி உயிரிழந்ததால், ஒரு மணி நேரம் பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து, நேற்று, மாலை 6:00 மணிக்கு, சென்னை சென்ட்ரலுக்கு, புறப்பட்ட புறநகர் ரயில், மாலை 6:40 மணிக்கு அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
மாடு ஒன்று தண்டவாளத்தை கடந்தது. அப்போது, புறநகர் ரயிலில் சிக்கி உயிரிழந்தது. மாட்டின் உடலுடன் ரயில் சிறிது துாரம் சென்று, அத்திப்பட்டு ரயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் நின்றது.
இதில், ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் நடைமேடையிலும், மற்ற பெட்டிகள் வெளியிலும் நின்றதால், பயணியர் இறங்குவதற்கு வழியின்றி தவித்தனர்.
ரயில்வே ஊழியர்கள் அங்கு சென்று, ரயிலை பின்னோக்கி எடுத்து, சக்கரத்தில் சிக்கியிருந்த மாட்டின் உடலை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், இந்த வழித்தடத்தில் சென்னை நோக்கி பயணிக்க வேண்டிய புறநகர் மற்றும் விரைவு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இரவு 7:50 மணிக்கு, மீட்டு பணிகள் முடிந்து, புறநகர் ரயில் புறப்பட்டது. அதையடுத்து மற்ற ரயில்களும் சென்றன.
இந்த சம்பவத்தால், கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் ஒரு மணி நேரம் புறநகர் ரயில் சேவை பாதித்து பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.