
பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகம்
திருத்தணி நகராட்சியில், அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.
சாலையோர கடைகள், ஓட்டல், காய்கறி, பழக்கடைகளில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நகராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக் கவர் சோதனை மற்றும் அபராதம் விதிப்பதில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நகராட்சியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.
- க.விநாயகம், திருத்தணி.
மின்விளக்குகள்
பொருத்தப்படுமா?
திருத்தணி நகராட்சி, காந்திரோடு மெயின் சாலையில், 24 மணி நேரமும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நடந்து சென்றவாறு உள்ளனர். திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து பயணியர் காந்திரோடு வழியாக முருகப்பநகர், கலைஞர்நகர், பெரியதெரு, கீழ்பஜார் தெரு உள்பட பல்வேறு தெருக்களுக்கு நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து, 600 மீட்டர் நீளத்திற்கு காந்திரோடு மெயின் சாலையில் நகராட்சி நிர்வாகம் சாலையோரம் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.
- அ.முனுசாமி, திருத்தணி.