/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கியவர் மீது புகார்
/
அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கியவர் மீது புகார்
ADDED : மார் 28, 2025 10:46 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ், 62. இவர், அ.தி.மு.க., திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, மீஞ்சூரில் உள்ள அ.தி.மு.க., நகர செயலர் அலுவலகத்திற்கு சென்று, கிளை கழக படிவம் கேட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் படிவம் இல்லை எனக் கூறியதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின், அலுவலகத்தில் இருந்த அ.தி.மு.க,வினர், காமராஜை தாக்கினர். இதில், காமராஜ் கழுத்து மற்றும் முதுகில் காயமடைந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக காமராஜ், அ.தி.மு.க., நகர செயலர் உள்ளிட்ட, ஆறு பேர் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.