/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் அகற்றும், குடிநீரேற்றும் நிலைய பணி உள்ளூர் ஒப்பந்ததாரர்களை ஒதுக்குவதாக புகார்
/
கழிவுநீர் அகற்றும், குடிநீரேற்றும் நிலைய பணி உள்ளூர் ஒப்பந்ததாரர்களை ஒதுக்குவதாக புகார்
கழிவுநீர் அகற்றும், குடிநீரேற்றும் நிலைய பணி உள்ளூர் ஒப்பந்ததாரர்களை ஒதுக்குவதாக புகார்
கழிவுநீர் அகற்றும், குடிநீரேற்றும் நிலைய பணி உள்ளூர் ஒப்பந்ததாரர்களை ஒதுக்குவதாக புகார்
ADDED : பிப் 04, 2025 01:09 AM
சென்னை,
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் அகற்றும் நிலையம் மற்றும் குடிநீர் நீரேற்று நிலையங்களை இயக்குதல் மற்றும் பராமரிக்க, சிப்பமாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதால், உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:
சென்னையில் குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் அகற்றும் நிலையம் மற்றும் குடிநீர் நீரேற்றும் நிலையங்கள் ஒப்பந்தம் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த ஆணை பெற்று, அவற்றை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை, 25 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
தற்போது, குடிநீர் வாரியத்தின் மூன்று மண்டலங்களில் உள்ள அனைத்து கழிவுநீர் அகற்றும் நிலையம் மற்றும் குடிநீர் நீரேற்று நிலையங்களை ஒன்றிணைத்து, ஐந்து சிப்பங்களாக தேசிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்கள், வெளி மாநில ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுக்கும் வகையில், ஒப்பந்தப்புகள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சென்னை குடிநீர் வாரியத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து, பணி செய்து வந்த சிறு ஒப்பந்ததாரர்கள், தேசிய ஒப்பந்தப்புள்ளியில் பங்கு பெற முடியாத நிலைஉள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்டஉள்ளூர் ஒப்பந்ததாரர்கள்மற்றும் அவர்களிடம் வேலை செய்யும், 3,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
சிப்பம் முறை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என, 2021 ம் ஆண்டு தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. எனவே, குடிநீர் வாரிய சிப்பம் முறையில் விடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.