/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புகார் அளித்தும் பயனில்லை
/
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புகார் அளித்தும் பயனில்லை
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புகார் அளித்தும் பயனில்லை
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புகார் அளித்தும் பயனில்லை
ADDED : ஏப் 30, 2025 06:33 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கீமலுார் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவில் அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
அதிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்தொட்டி, 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.
எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் தொட்டி இருப்பதால், சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராமவாசிகள் புலம்புகின்றனர்.
எனவே, கிராமவாசிகளின் நலன் கருதி, உடனடியாக தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.