/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரியில் விதிமீறி மண் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக புகார்

UPDATED : ஆக 06, 2025 02:58 AM
ADDED : ஆக 06, 2025 02:22 AM
திருவள்ளூர்:பட்டரைபெரும்புதுார் ஏரியில் செயல்படும் சவுடு மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
பட்டரைபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பாக, சமூக ஆர்வலர் வசந்தகுமார் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
பட்டரைபெரும்புதுார் ஏரியில், சவுடு மண் குவாரிக்கு, சர்வே எண்: 312/7 என்ற இடத்தில், 45 நாட்களுக்கு 2,000 லோடு என்ற அளவில் சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களுடன், மற்ற இடங்களிலும், நாள்தோறும் 1,000 லோடுக்கு மேல், போலியாக பில் தயாரித்து மண் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 15 அடிக்கு மேல் தோண்டி, அங்குள்ள மணலையும் சட்டவிரோதமாக அள்ளிச் செல்கின்றனர்.
இதனால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அந்த சவுடு மண் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்வதுடன், விதி மீறியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.