/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பறிமுதல் வாகனங்கள் 12 ஆண்டாக வீணாகி வரும் அவலம்
/
திருத்தணியில் பறிமுதல் வாகனங்கள் 12 ஆண்டாக வீணாகி வரும் அவலம்
திருத்தணியில் பறிமுதல் வாகனங்கள் 12 ஆண்டாக வீணாகி வரும் அவலம்
திருத்தணியில் பறிமுதல் வாகனங்கள் 12 ஆண்டாக வீணாகி வரும் அவலம்
ADDED : செப் 14, 2025 11:10 PM

திருத்தணி:திருத்தணியில் இயங்கி வரும் மதுவிலக்கு காவல் நிலையத்தில், 12 ஆண்டுகளாக குற்ற வழக்குகளில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் ஏலம் விடாமல் வீணாகி வருகிறது.
திருத்தணி காந்திரோடு பகுதியில் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் இயங்கி வருகிறது.
திருத்தணி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, திருத்தணிக்கு கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், குற்றச் செயல்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், பல ஆண்டுகளாக காவல் நிலைய வளாகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதில், பெரும்பாலான வாகனங்கள் சேதமடைந்து, மண்ணோடு மண்ணாகி வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளாக போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடாமல் வீணாகி வருகின்றன.
இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும், வாகனங்களை முறையாக ஏலம் விட்டால், பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
எனவே, மாவட்ட எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்களை ஏலம் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.