/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் திரிந்த மாடுகள் பறிமுதல் உரிமையாளர்கள் ஓட்டி சென்றதால் பரபரப்பு
/
சாலையில் திரிந்த மாடுகள் பறிமுதல் உரிமையாளர்கள் ஓட்டி சென்றதால் பரபரப்பு
சாலையில் திரிந்த மாடுகள் பறிமுதல் உரிமையாளர்கள் ஓட்டி சென்றதால் பரபரப்பு
சாலையில் திரிந்த மாடுகள் பறிமுதல் உரிமையாளர்கள் ஓட்டி சென்றதால் பரபரப்பு
ADDED : அக் 30, 2025 10:06 PM
ஊத்துக்கோட்டை:சாலையில் திரிந்த மாடுகளை பறிமுதல் செய்த பேரூராட்சி ஊழியர்களின் அனுமதியில்லாமல், மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி.
ஆந்திராவின் புத்துார், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், பெங்களூரு உள்ளிட்ட பகுதி களுக்குச் செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.
ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள, கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு, ஊத்துக்கோட்டை செல்வதால், இப்பகுதியில் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
இப்பகுதியில் மாடுகளை வளர்ப்பவர்கள் அவற்றை வீடுகளில் கட்டி வளர்க்காமல், சாலையில் விடுகின்றனர்.
இவை அங்குள்ள பூ, காய்கறி, பழ கடைகளுக்கு செல்லும்போது, வியாபாரிகள் அவற்றை துரத்துகின்றனர். இதனால் தறிகெட்டு ஓடும் மாடுகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது மோதி காயம் அடைகின்றன.
நேற்று காலை பேரூராட்சி ஊழியர்கள் சாலையில் திரிந்த, 22 மாடுகளை பிடித்து, பழைய பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் கட்டி வைத்தனர்.
தகவலறிந்த மாட்டின் உரிமையாளர்கள் வந்து, பேரூராட்சி ஊழியர்களை கேட்காமல், தங்களது மாடுகளை பிடித்துச் சென்றனர்.
மாடுகளை ஓட்டி சென்ற உரிமையாளர்கள் மீது  போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக, பேரூராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

