/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரம்பாக்கத்தில் குட்கா பறிமுதல்
/
பேரம்பாக்கத்தில் குட்கா பறிமுதல்
ADDED : அக் 08, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:மப்பேடு அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது விஜயகுமார், 49 என்பவரது கடையில் சோதனை மேற்கொண்டபோது அவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பாக்குகள் இருப்பது தெரிய வந்தது.
கடையிலிருந்து 52 ஹான்ஸ், 4, விமல், 2 கூல் லிப், என மொத்தம் 58 போதைப்பாக்குகள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2, 300 ரூபாய். வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

