/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் அரிசி பறிமுதல்: இருவருக்கு காப்பு
/
ரேஷன் அரிசி பறிமுதல்: இருவருக்கு காப்பு
ADDED : டிச 24, 2024 12:15 AM
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ரயில் நிலைய சாலை வழியாக, காஞ்சிபுரத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, மணவூர் ரயில் நிலைய சாலையில் நின்று இருந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 40 கோணிப்பைகளில், 2,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த காஞ்சிபுரம் நகரம் ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த பாலாஜி, 19, மற்றும் சலீம் அக்பர், 29, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அரிசி கடத்திய சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.