/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பார்க்கிங் வசதியில்லாத மண்டபங்களால் நெரிசல்
/
பார்க்கிங் வசதியில்லாத மண்டபங்களால் நெரிசல்
ADDED : செப் 30, 2025 11:59 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பகுதி மக்கள் ஆளாகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை மற்றும் ரெட்டம்பேடு சாலையில், 12 திருமண மண்டபங்கள் உள்ளன.
ஒரு சில திருமண மண்டபங்களை தவிர மற்றும் அனைத்து மண்டபங்களிலும் பார்க்கிங் வசதி உள்ளது.
திருமண விழாவிற்கு வருபவர்கள், அந்த மண்டபங்களின் முகப்பில், ஜி.என்.டி., சாலை மற்றும் ரெட்டம்பேடு சாலையோரம் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதனால், விஷேச நாட்களில் மேற்கண்ட இரு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக ரெட்டம்பேடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், ரெட்டம்பேடு சாலையில், தீயணைப்பு மற்றும் போலீஸ் நிலையம் அமைத்திருப்பதால், விசேஷ நாட்களில் அவசர தேவைக்கு செல்ல முடியாமல், தீயணைப்பு மற்றும் போலீசார் வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன.
அனைத்து மண்டப உரிமையாளர்களையும் அழைத்து, பார்க்கிங் வசதியை முறைப்படுத்த, வலியுறுத்த வேண்டும். அதற்கு கும்மிடிப்பூண்டி போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.