/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் எதிரே நெரிசல் கீளப்பூடி மக்கள் அவதி
/
டாஸ்மாக் எதிரே நெரிசல் கீளப்பூடி மக்கள் அவதி
ADDED : டிச 26, 2025 06:50 AM

பொதட்டூர்பேட்டை: கீளப்பூடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோரின் வாகனங்கள், சாலையிலேயே நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டையில் இருந்து கீளப்பூடி செல்லும் குறுகலான சாலையில், டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இச்சாலையில், 10க்கும் மேற்பட்ட, 'எல்' வடிவ சாலை திருப்பங்கள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இந்த வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனங்கள் கீளப்பூடி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இச்சாலையின் குறுக்கே, தற்போது நகரி -- திண்டிவனம் ரயில்பாதை அமைப்பதற்கான கட்டுமான பணியில், நுாற்றுக்கணக்கான லாரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே டாஸ்மாக் கடைக்கு வரும் வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

