ADDED : செப் 26, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்:தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை குறித்து, அவதுறாக பேசியதாக, அ.தி.முக., பொதுசெயலர் பழனிச்சாமியை கண்டித்து, காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அ.தி.மு.க., பொது செயலர் பழனிச்சாமி, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதுறாக பேசியதாக கூறப்படுகிறது. அவரது கருத்திற்கு காங்., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று, பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் தலைமையில், நேற்று மீஞ்சூரில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது, போலீசார் கைப்பற்றினர்.