/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணிகள் நிறுத்தம்
/
பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணிகள் நிறுத்தம்
பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணிகள் நிறுத்தம்
பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் பணிகள் நிறுத்தம்
ADDED : ஏப் 08, 2025 12:12 AM

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் ஊராட்சியில் வசிக்கும் இருளர் குடும்பத்தினர், சொந்த வீடுகள் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், தனிநபர்களிடம் நிலத்தை வாங்கி, முதலில் 24 குடும்பத்தினருக்கு, பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ், தலா 5.07 லட்சம் ரூபாய் வீதம், 1.22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆறு மாதத்திற்கு முன் தன்னார்வலர்கள் வாயிலாக வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதில், 19 வீடுகளுக்கு அடித்தளம் போடப்பட்டது. மீதமுள்ள, ஐந்து வீடுகளுக்கு அடித்தளம் கூட அமைக்கவில்லை. பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பயனாளிகள் கூறியதாவது:
எங்களால் வீடுகள் கட்டி கொள்ள முடியாததால், எங்கள் ஒப்புதலுடன் தனிநபர்கள் வாயிலாக வீடுகள் கட்டி வந்தனர். அடித்தளம் அமைத்துள்ள வீடுகளுக்கு தொகை வழங்கப்படாததால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வீடு கட்டும் பணிகளை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.
இதனால், கட்ட பணிகள் தரமாக உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே கலெக்டர் நேரில் பார்வையிட்டு, வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.