sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

189 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...வலியுறுத்தல்:கழிப்பறை, குடிநீர் வசதியின்றி குழந்தைகள் பரிதவிப்பு

/

189 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...வலியுறுத்தல்:கழிப்பறை, குடிநீர் வசதியின்றி குழந்தைகள் பரிதவிப்பு

189 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...வலியுறுத்தல்:கழிப்பறை, குடிநீர் வசதியின்றி குழந்தைகள் பரிதவிப்பு

189 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட...வலியுறுத்தல்:கழிப்பறை, குடிநீர் வசதியின்றி குழந்தைகள் பரிதவிப்பு


ADDED : மே 14, 2025 11:35 PM

Google News

ADDED : மே 14, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 189 அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர். எனவே, அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், பிறந்த ஆறு மாதம் - 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அளிக்கவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மையங்களில், மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்த்தல், முன்பருவ கல்வி, இணை உணவு, சத்துணவு மற்றும் தடுப்பூசி போன்ற திட்ட பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், புழல் ஒன்றியத்தை தவிர்த்து, மீதமுள்ள 13 ஒன்றியங்களில், 1,757 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில், ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான 36,736 குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் முன்பருவ கல்வியும், மதிய உணவு 37,703 குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும், 11,933 கர்ப்பிணியர், 10,235 தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு, அவர்களின் உடல் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் கிராமங்கள் நிறைந்த இம்மாவட்டத்தில், ஏழை, எளியோர் தங்கள் குழந்தைகளை முன்பருவ கல்வி கற்கவும், சத்துணவு பெறவும், அங்கன்வாடி மையங்களையே நாடி வருகின்றனர்.

தற்போது அங்கன்வாடி மையங்களில், இணை உணவு பயனாளிகளாக ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை, 35,532 பேரும், முன்பருவ கல்வி மற்றும் மதிய உணவு பயனாளிகளாக 37,581 பேரும் பயனடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி என, 1,349 இடங்களில் மட்டுமே அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.

வாடகையில்லா அரசு கட்டடங்கள் மற்றும் தனியார் இடத்தில் 224 மையங்கள் உள்ளன. மற்ற பகுதிகளான ஊரக பகுதியில் 118, நகராட்சியில் 27, பேரூராட்சியில் 32 மற்றும் மாநகராட்சியில் 12 என, மொத்தம் 189 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.

அரசுக்கு சொந்தமான இடங்களில் போதிய இடவசதி, குடிநீர், கழிப்பறை, விளையாடும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால், வாடகை கட்டடத்தில் அந்த வசதிகள் இல்லை.

குறிப்பாக கழிப்பறை, விளையாடும் திடல் போன்ற கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட சில ஒன்றியங்களில், வாடகைக்கு இருக்கும் இடம் மிகவும் பாழடைந்தும், குறுகிய நிலையிலும் உள்ளது.

இதுகுறித்து திருவள்ளூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீதர் கூறியதாவது:

அங்கன்வாடி மையங்கள் மூன்று வயதிற்கு குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய ஆரம்ப கல்வி கற்கும் கூடமாக விளங்கி வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், முன்மாதிரி மையங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

அவை அனைத்தும் ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து வசதியற்ற, வறுமைக்கோட்டுக்கு பின்தங்கிய கிராம பகுதிகளில் அதுபோன்ற வசதிகள் எதுவும், அங்கன்வாடிகளில் உருவாக்கி தரவில்லை.

இது, ஆரம்ப கல்வி கற்க ஆர்வமாக உள்ள ஏழை குழந்தைகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது. மேலும், பல கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவது கவலையை ஏற்படுத்துகிறது.

முன்பருவ கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு போதிய இடவசதி, காற்றோட்டம், உடல் ஆரோக்கியத்திற்காக விளையாடும் இடவசதி போன்றவை இல்லாமலும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இதனால், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோரும் அச்சப்படுகின்றனர்.

எனவே, வாடகை மற்றும் தனியார் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடிகளுக்கு, சொந்த கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகம் வாயிலாக, தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் அரசு நிலங்கள் கண்டறிந்து, அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு முடிவெடுத்து உத்தரவிட்ட பின், அரசுக்கு சொந்தமான இடங்களில் அங்கன்வாடி மையம் கட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள்

வளர்ச்சி திட்ட அலுவலர்,

திருவள்ளூர்.

வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள்

ஒன்றியம் அங்கன்வாடி மையம்

எல்லாபுரம் 12

கும்மிடிப்பூண்டி 10

கடம்பத்துார் 4

மீஞ்சூர் 12

பள்ளிப்பட்டு 30

பூந்தமல்லி 34

பூண்டி 11

ஆர்.கே.பேட்டை 14

சோழவரம் 8

திருத்தணி 26

திருவாலங்காடு 19

திருவள்ளூர் 3

வில்லிவாக்கம் 6

மொத்தம் 189






      Dinamalar
      Follow us