/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் முதல்வர் பங்கேற்கும் விழா பூமி பூஜையுடன் கட்டமைப்பு பணி துவக்கம்

ADDED : ஏப் 10, 2025 08:29 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பெருஞ்சேரி கிராமத்தில், வரும், 19ம் தேதி, 75,000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். பொன்னேரி நகர பகுதியில் ரோட்ஷோவில் பங்கேற்று பொதுமக்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெருஞ்சேரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான மேடை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகளுக்கு அங்குள்ள காலி நிலங்கள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.
விழாமேடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தற்காலிக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், பூந்தமல்லி தி.மு.க.- எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, தி.மு.க., திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.