/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி அருகே கட்டுமான பணி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
அங்கன்வாடி அருகே கட்டுமான பணி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
அங்கன்வாடி அருகே கட்டுமான பணி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
அங்கன்வாடி அருகே கட்டுமான பணி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : பிப் 15, 2024 08:25 PM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கர்லம்பாக்கம் கிராமம்.
இந்த கிராமத்தில், சோளிங்கர் சாலையை ஒட்டி, அரசு நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, நுாலகம், மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த பகுதியில் சாலையின் குறுக்கே தற்போது இரண்டு பாலங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, இரும்புக் கம்பிகளை கட்டுமானத்திற்கு தயார் செய்யும் வேலை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த இரும்புக் கம்பிகள், அங்கன்வாடி மையத்தின் நுழைவாயில் எதிரே வெட்டி வளைத்து தயார் செய்யப்பட்டு வருகிறது. வெட்டி துண்டாக்கப்பட்ட கம்பிகள், அங்கன்வாடி மைய வாயிற்கதவை ஒட்டி இருப்பு வைக்கப்படுகின்றன.
இதனால், அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. கம்பி கட்டும் பணிகளை பாதுகாப்பான பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.