/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுவர் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி
/
சுவர் இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி
ADDED : ஜன 31, 2025 02:11 AM

பொன்னேரி:பொன்னேரி, என்.ஜி., நகரை சேர்ந்தவர் ஆரோன், 30. கட்டட தொழிலாளி. நேற்று, இவர் பொன்னேரி அருகே உள்ள திருவாயற்பாடி குளக்கரை தெருவில், கட்டட தொழிலுக்கு சென்றார்.
பழைய வீடு ஒன்றை இடிக்கும் பணியில், சக தொழிலாளி ஒருவருடன் ஈடுபட்டிருந்தார். வீட்டின் சுவரை சம்மட்டி, கடப்பாரை உதவியுடன் இடித்தபோது, திடீரென சுவர் மொத்தமாக சரிந்து, ஆரோன் மீது விழுந்தது.
கட்டட இடிபாடுகளில் சிக்கி, ஆரோன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக, அருகில் வசிப்பவர்கள் உதவியுடன், இடிபாடுகளை சிக்கிய ஆரோனை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக, பொன்னேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

