/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி
/
கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி
ADDED : அக் 06, 2024 07:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைச் சேர்ந்தவர் ராஜா, 55; கட்டட தொழிலாளி. இவர், கும்மிடிப்பூண்டியில் தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மாலை கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிபாளையம் கிராமத்தில், மாரி என்பவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, 5 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயம் அடைந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரம்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.