/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி மின் ரயிலில் இருந்து குதித்த கட்டட தொழிலாளி கால் துண்டானது
/
திருத்தணி மின் ரயிலில் இருந்து குதித்த கட்டட தொழிலாளி கால் துண்டானது
திருத்தணி மின் ரயிலில் இருந்து குதித்த கட்டட தொழிலாளி கால் துண்டானது
திருத்தணி மின் ரயிலில் இருந்து குதித்த கட்டட தொழிலாளி கால் துண்டானது
ADDED : ஜன 07, 2025 08:47 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 40; இவர், கட்டட பணிகளில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
இவர், தினமும் திருத்தணியில் இருந்து ரயில் வாயிலாக சென்னைக்கு சென்று, அங்கு புதிய கட்டடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.
அந்த வகையில், நேற்று முன்தினம், சிவா ரயில் வாயிலாக சென்னைக்கு சென்று வேலை செய்தார். மாலை 6:00 மணிக்கு வேலை முடிந்ததும், சிவா சென்னை சென்டரலில் இருந்து திருத்தணி ரயில் நிலையம் இயக்கும் மின்சார ரயிலில் பயணம் செய்தார்.
இரவு 9:00 மணிக்கு திருத்தணி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்த போது, சிவா துாங்கிவிட்டார்.
பின், திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில், சிறிது துாரம் வந்ததும், சிவா திடீரென எழுந்து, ரயில் நிலையத்தில் இறங்காமல் வந்து விட்டோம் என, திருத்தணி இரண்டாவது ரயில்வே கேட் அருகே மெதுவாக ரயில் சென்ற போது, ரயிலில் இருந்து கீழே குதித்தார்.
அப்போது, சிவாவின் இடது கால் ரயில் சக்கரத்தில் சிக்கி கால் துண்டானது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.