/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டுமான தொழிலாளர்கள் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான தொழிலாளர்கள் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2024 08:29 PM
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில், பொங்கலை கொண்டாடுவதற்கு, கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகையாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல், 21பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். ஒய்வு ஊதியத்தை, 1,000ல் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
பணியிடம் மட்டுமின்றி, எங்கு விபத்தில் சிக்கினாலும் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
நலவாரியத்தில் 'ஆன்லைன்' வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தலின்போது, ஏற்படும் 'சர்வர்' கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள, 4,500 கோடி ரூபாய் நிதியை தொழிலாளர்கள் நலன்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

