/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடரும் போக்குவரத்து நெரிசல்: திருத்தணி மக்கள் கடும் அவதி
/
தொடரும் போக்குவரத்து நெரிசல்: திருத்தணி மக்கள் கடும் அவதி
தொடரும் போக்குவரத்து நெரிசல்: திருத்தணி மக்கள் கடும் அவதி
தொடரும் போக்குவரத்து நெரிசல்: திருத்தணி மக்கள் கடும் அவதி
ADDED : செப் 25, 2025 01:47 AM

திருத்தணி:திருத்தணி, ம.பொ.சி., சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
சென்னை, திருப்பதி, வேலுார், சித்துார் உள்ளிட்ட மார்க்கத்தில் இருந்து, தினமும் ஏராளமான வாகனங்கள், திருத்தணி நகராட்சி, ம.பொ.சி., சாலை வழியாக பேருந்து நிலையம், முருகன் கோவில் மற்றும் அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக பிற இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இதனால் ம.பொ.சி., நெடுஞ்சாலையில், அதிகாலை 3:30 - நள்ளிரவு 11:30 மணி வரை வாகனங்கள் தொடர்ந்து சென்றவாறு இருக்கும்.
விழா நாட்கள் மற்றும் திருமண முகூர்த்த நாட்களில், ம.பொ.சி., சாலையில், அரை கி.மீட்டரை கடப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
அந்த நேரத்தில், சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காந்தி சிலையும் சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது.
ஆனாலும், ம.பொ.சி., சாலையை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருவதால், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.