/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமையல் உதவியாளர் பணி 107 விண்ணப்பம் தள்ளுபடி
/
சமையல் உதவியாளர் பணி 107 விண்ணப்பம் தள்ளுபடி
ADDED : மே 14, 2025 11:55 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் செருக்கனுார், வீரகநல்லுார், கார்த்திகேயபுரம், பெரியகடம்பூர், திருத்தணி நகராட்சி, முருக்கம்பட்டு அலுமேலுமங்காபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இயங்கி வரும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மொத்தம் 13 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு, கடந்த மாதம் 15 - ஏப்., 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஒன்றிய அலுவலகத்தில் பெறப்பட்டன. இதில், 13 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு, மொத்தம், 234 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்களை ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் சத்துணவு பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அலுவலர்கள், தகுதி அடிப்படையில் விண்ணப்பங்களை தேர்வு செய்தனர்.
அதன்படி, 127 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதமுள்ள 107 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை நேற்று, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டர் உத்தரவு பெற்ற பின், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்படும் என, ஒன்றிய அதிகாரி தெரிவித்தார்.

