/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு சிறுவர்களை கடித்து குதறிய நாய்கள் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்

ADDED : மார் 19, 2025 01:46 AM

ஆர்.கே.பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆர்.கே.பேட்டையில் நேற்று ஒரே நாளில் இரண்டு குழந்தைகளை நாய்கள் கடித்தன. இதில், பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் வெற்றிவேல், 3. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென வந்த நாய் வெற்றிவேலை கடித்து குதறியது. இதில், முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. குழந்தையை மீட்ட பெற்றோர், உடனடியாக வேலுார் அடுத்த ரத்னகிரி சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதேபோல், ஆர்.கே.பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்திரமவுலி, 14, என்ற சிறுவன், நேற்று முன்தினம் இரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த பகுதியில் புதிதாக சுற்றித் திரிந்த நாய், சந்திரமவுலியை கடித்து குதறியது.
அக்கம்பக்கத்தினர் சந்திரமவுலியை மீட்டு, விளக்கணாம்பூடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.