/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாழ்வாக தொங்கும் 'மின் ஒயர்' முட்டு கொடுத்து சமாளிப்பு
/
தாழ்வாக தொங்கும் 'மின் ஒயர்' முட்டு கொடுத்து சமாளிப்பு
தாழ்வாக தொங்கும் 'மின் ஒயர்' முட்டு கொடுத்து சமாளிப்பு
தாழ்வாக தொங்கும் 'மின் ஒயர்' முட்டு கொடுத்து சமாளிப்பு
ADDED : ஜன 22, 2025 01:30 AM

திருவள்ளூர்:தாழ்வாக தொங்கும் மின் ஒயரால் அச்சப்பட்ட அப்பகுதிவாசிகள், கட்டையால் முட்டு கொடுத்து சமாளித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்டது என்.ஜி.ஓ., காலனி. இங்குள்ள பூங்கா அருகில், மதியழகன் தெரு உள்ளது. இந்த தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன.
இந்த குடியிருப்புவாசிகளுக்காக, மின்சார வாரியம், மின்கம்பம் அமைத்து, மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் மிக நீண்ட தொலைவில் உள்ளதால், இரண்டு கம்பங்களுக்கும் இடையில், மின் ஒயர் மிக தாழ்வாக தொங்கி உள்ளது.
இதனால், அருகில் உள்ள வீடுகளில் மின் ஒயர் உராய்ந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து, இந்த தெருவாசிகள், இரண்டு மின் கம்பங்களுக்கு இடையில், கட்டையால் முட்டு கொடுத்து, தாழ்வாக தொங்கிய மின் ஒயரை உயர்த்தி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு புகார் பதிவு செய்தனர்.
இதையடுத்து, ஒரு ஆண்டிற்கு முன், மின்வாரியத்தினர் மின் கம்பத்தினை இங்கு கொண்டு வந்தனர். ஆனால், அந்த மின் கம்பத்தினை இதுவரை அந்த இடத்தில் நடவில்லை. இதனால், மின்கம்பம் கிடக்கும் இடத்தில் செடிகள் வளர்ந்து, புதராக மாறி விட்டது.
எனவே, மின்வாரியத்தினர் மின் கம்பத்தினை நட்டு, தாழ்வாக தொங்கும் மின் ஒயரை உயர்த்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.