/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் கடமைக்கு நடந்த கவுன்சிலர் கூட்டம்
/
கும்மிடியில் கடமைக்கு நடந்த கவுன்சிலர் கூட்டம்
ADDED : ஜன 30, 2025 10:59 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் ஷகிலா தலைமையில், நேற்று நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
வரவு, செலவு, வரி வசூல், நிலுவை, திட்டங்கள், கோரிக்கைகள் உள்ளிட்ட, 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், தீர்மானம் கூட வாசிக்கப்படாமல், அடுத்த 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டது.
வழக்கம் போல், பெரும்பாலான கவுன்சிலர்கள் சற்று தாமதமாக வந்த நிலையில், அவர்களுக்கு கூட்டம் முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவசரமாக கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதால், கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர். மக்கள் பிரச்னை குறித்து, கூட்டத்தில் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்க பெறாததால், ஏமாற்றத்துடன் கவுன்சிலர்கள் திரும்பி சென்றனர்.
இனி வரும் காலங்களில், முறையாக கூட்டம் நடத்த வேண்டும் என, கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.