/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் கவுன்சிலர்கள் கோரிக்கை

ADDED : நவ 12, 2025 10:12 PM

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நேற்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், 'தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்' என, கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம், தலைவர் சரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., - அ.தி.மு.க., என, மொத்தம் 18 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரவு - செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதுடன், நடந்து செல்வோரை கடிக்கின்றன. எனவே, உடனே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு, கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதுதவிர, வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.