/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'வரவு - செலவு கணக்கு விபர அறிக்கை தருவதில்லை' நகராட்சி கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் குமுறல்

ADDED : நவ 30, 2024 01:20 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சியில், நேற்று மாதாந்திர அவசர கூட்டம் தி.மு.க,வைச் சேர்ந்த தலைவர் டாக்டர் பரிமளம் தலைமையில் நடந்தது. மொத்தம் உள்ள 27 கவுன்சிலர்களில், தலைவர், அ,தி.மு.க.,வைச் சேர்ந்த துணை தலைவர் விஜயகுமார் உட்பட, 8 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளைச் சேர்ந்த 18 பேர் நகராட்சியின் செயல்பாடுகளை கண்டித்து, கூட்டத்தில் பங்கேற்றாமல் புறக்கணித்தனர்.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:
நகராட்சி நிர்வாகம் துவங்கி, மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை வரவு - செலவு கணக்கு கவுன்சிலர்களுக்கு வழங்கபடவில்லை. பலமுறை கேட்டும் பதில் இல்லை.
கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகளை தலைவரிடம் தான் தெரிவித்து தீர்வு காண வேண்டும். தலைவர் அலுவலகத்திற்கு வந்து செல்வதே தெரிவதில்லை.
பொதுமக்களும் தலைவரை சந்திக்க முடிவதில்லை. பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் குறைகளை தெரிவித்து, நகராட்சி நிர்வாகத்தின் வாயிலாக தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. அது தொடர்பாக, கவுன்சிலர்களிடம் அந்தந்த வார்டுகளின் நிலவரம் குறித்து, எந்தவொரு ஆலோசனைகளும் பெறவில்லை.
அவசர பணிகளுக்கு மட்டுமே பொது நிதியை பயன்படுத்த வேண்டும். அதை கடைப்பிடிக்காமல் நிதி வீணடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்திருந்த நிலையில், கூட்டரங்கில் இருக்கைகள் காலியாக இருந்தன. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் மட்டும், தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பொன்னேரி நகராட்சியில் தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இணைந்து கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.