/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டத்தில் வரவு -- செலவு கணக்கு கேட்டால் தருவதில்லை பொன்னேரி நகராட்சியில் கவுன்சிலர்கள் போராட்டம்

ADDED : டிச 31, 2024 01:22 AM

பொன்னேரி, பொன்னேரி நகராட்சியில், நேற்று, மாதாந்திர கூட்டம் தி.மு.க,வைச் சேர்ந்த தலைவர் பரிமளம் தலைமையில் நடந்தது. நகராட்சி பெண் கமிஷனர் எஸ்.கே.புஷ்ரா, அ.தி.மு.கவைச் சேர்ந்த துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'மூன்று ஆண்டுகளாக நகராட்சியின் வரவு - செலவு கணக்கு விபரங்களை கேட்டும் தருவதில்லை, சாலை வசதிகள் செய்து தரவில்லை, ஊழல் நடைபெறுகிறது' என, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில்,அவர்கள் கூட்டத்தை பாதியில் புறக்கணித்து வெளியேறினர்.
இது குறித்து தி.மு.க, - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு கூட்டத்திலும், நகராட்சியின் வரவு - செலவு கணக்கு விபரங்களை கேட்டும் தருவதில்லை. பல்வேறு திட்டப் பணிகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.
கவுன்சிலர்கள் அவர்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகளை கேட்டு, அதன் அடிப்படையில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வருவதில்லை.
அவர்களாக தீர்மானம் எழுதி, அவர்களுக்கு ஒத்துழைக்கும் கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றுகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட வேண்பாக்கம், என்.ஜி.நகர்., பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தினம் தினம் அவதிப்படுகின்றனர். அவற்றை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
இதனால். மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தி.மு.க, - அ.தி.மு.க, கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.