ADDED : நவ 26, 2024 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த தெக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 36. இவரது மனைவி ராஜேஸ்வரி, 32. நேற்று முன்தினம் ஸ்பெளண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு சென்றனர். அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அதே வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தெக்களூர் ஏரிக்கரையில் வளைவில் திரும்பி போது எதிரே வந்த கார் , இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கணவன், மனைவி பலத்த காயமடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.