/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டுமனை தகராறு தம்பதிக்கு கொலை மிரட்டல்
/
வீட்டுமனை தகராறு தம்பதிக்கு கொலை மிரட்டல்
ADDED : நவ 26, 2024 05:08 AM
மேல்நல்லாத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார்பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33.
இப்பகுதி காந்தி தெருவில் உள்ள இவரது வீட்டு மனையை அருகில் வசித்து வரும் பாலாஜி, 50என்பவர் 3 அடி ஆக்கிரமித்துள்ளார்.
இதுகுறித்து அடிக்கடி இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஜெயச்சந்திரன் கேட்ட போது பாலாஜி மற்றும் உறவினர்களான கோபி, அஜய் ஆகிய மூவரும் ஜெயச்சந்திரன்மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.