/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெய்தவாயலில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு கிராமவாசிகளின் எதிர்ப்பால் நிறுத்தம்
/
நெய்தவாயலில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு கிராமவாசிகளின் எதிர்ப்பால் நிறுத்தம்
நெய்தவாயலில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு கிராமவாசிகளின் எதிர்ப்பால் நிறுத்தம்
நெய்தவாயலில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு கிராமவாசிகளின் எதிர்ப்பால் நிறுத்தம்
ADDED : டிச 22, 2024 01:07 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, நெய்தவாயல் கிராமத்தில் முனுசாமி தாத்தா கோவில் உள்ளது. இந்த கோவிலை கிராமவாசிகள் நீண்ட காலமாக ஊர் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில், 3 கல் நடப்பட்டு உள்ளது. மேலும், 1 உருவம் வரையப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த கோவிலை ஒட்டி காலிமனை வைத்துள்ள தனிநபர் ஒருவர், மேற்கண்ட கோவில் சாலையை ஆக்கிரமித்து அமைந்துள்ளதாகவும், அதை அகற்ற வேண்டும் எனவும் பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று, கோவிலை அகற்றுவதற்காக அங்கு, 50க்கும் மேற்பட்ட போலீசார், நீதிமன்ற அலுவலர்கள் அங்கு வந்தனர். பொக்லைன் இயந்திரமும் கொண்டு வரப்பட்டது.
தங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து வழிபட்டு வரும் இந்த கோவிலை இடிக்கக்கூடாது எனக்கூறி, கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அங்கு கூடியதால் பதற்றம் நிலவியது. கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, தடுப்புகள் போட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் சம்பவ இடத்திற்கு சென்று, கிராமவாசிகள் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினார்.
அதையடுத்து சட்ட மேல் நடவடிக்கைகளுக்காக, கிராமமக்கள் கால அவகாசம் கோரினர். அதையடுத்து, கோவிலை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கிராமவாசிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.