/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடுகள் திருடியவர் சிறையில் அடைப்பு
/
மாடுகள் திருடியவர் சிறையில் அடைப்பு
ADDED : ஆக 06, 2025 02:47 AM

வெள்ளவடு:வெள்ளவேடு அருகே மாடுகள் திருடியவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வெள்ளவேடு பகுதியில் மாடுகள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த 3ம் தேதி இரவு, திருமழிசை பகுதியில் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற் கொண்டனர்.
அப்போது, திருமழிசை வாகன சோதனை பகுதியில் வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.
வாகனத்தை ஓட்டி வந்தோர், அதை நிறுத்தி விட்டு தப்பியோடினர். பின் போலீசார் வாகனத்தை ஆய்வு செய்தபோது, இரு பசுமாடுகள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார், டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் மாடுகளை திருடிய நபர், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 28, என்பதும், அவர் திருமழிசை அடுத்த படூர் பகுதியில் மாடுகளை திருடி வந்ததும் தெரிய வந்தது.
பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்கள் தெரியாததால், மாடுகளை திருவள்ளூரில் உள்ள மாடுகள் பராமரிக்கும் மையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட விஷ்ணு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.