/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடையை மீறி காப்புக்காட்டில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள்
/
தடையை மீறி காப்புக்காட்டில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள்
தடையை மீறி காப்புக்காட்டில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள்
தடையை மீறி காப்புக்காட்டில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள்
ADDED : அக் 14, 2024 06:18 AM

பள்ளிப்பட்டு : ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவில் மலைகளும், மலை சார்ந்த காப்புக்காடுகளும் அதிகளவில் உள்ளன. காப்புக்காடுகள் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த காடுகளில், மான், மயில், காட்டுப்பன்றி, முயல், கவுதாரி, நரி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
காப்புக்காடுகளில், வெளிநபர்கள் அத்துமீறி நுழைவது, மரங்களை வெட்டுதல், தீ ஏற்படுத்துதல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.
மீறினால், அபராதம்மற்றும் தண்டனை விதிக்கப்படும். ஆனால், பள்ளிப்பட்டு வனப்பகுதியில், காப்புக்காடுகளில் கால்நடைகளின் மேய்ச்சல் கட்டுப்பாடு இன்றி தாராளமாக உள்ளது.
வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினால், காடுகள் அழிவில் இருந்து பாதுகாக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.