/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
/
நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
ADDED : ஜன 20, 2025 11:52 PM

திருத்தணி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். குறிப்பாக, சென்னையில் இருந்து, திருவள்ளூர், திருத்தணி வழியாக ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா, திருப்பதிக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளூர் - திருத்தணி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில், பகல், இரவு நேரத்தில் மாடுகள் படுத்து உறங்குவதும், சுற்றித்திரிவதும் அதிகளவில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளால், தினமும், திருத்தணி - திருவள்ளூர் இடையே குறைந்தபட்சம், 5 இடங்களிலாவது இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர்.
சாலையில் திரியும் மாடுகளை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து, மாடுகளை பிடித்து கோசாலையில் விட வேண்டும். கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, பலமுறை அறிவுறுத்தியும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாடுகளை பிடிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.