/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பின்பக்கமாக சென்று சிக்கி கொண்ட பசு மாடுகள்
/
வீட்டின் பின்பக்கமாக சென்று சிக்கி கொண்ட பசு மாடுகள்
வீட்டின் பின்பக்கமாக சென்று சிக்கி கொண்ட பசு மாடுகள்
வீட்டின் பின்பக்கமாக சென்று சிக்கி கொண்ட பசு மாடுகள்
ADDED : ஆக 18, 2025 11:42 PM

ஊத்துக்கோட்டை சாலையில் திரிந்த மாடுகள், திடீரென வீட்டின் பின்பக்கம் சென்று வெளியேற முடியாத நிலையில், ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.
தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள, 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
சென்னையில் இருந்து ஆந்திராவின் திருப்பதி, கடப்பா, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.
இப்பகுதி மக்கள் சிலர் மாடுகளை வளர்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள் மாடுகளை வீடுகளில் வைத்து பராமரிக்காமல் சாலையில் திரிய விடுகின்றனர்.
இவை, பஜாரில் உள்ள காய்கறி, பழம், பூ ஆகிய கடைகளுக்கு செல்கின்றன.
அப்போது, வியாபாரிகள் மாடுகளை துரத்தும் போது, அவை தறிகெட்டு ஓடுகின்றன. அப்போது, பாதசாரிகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.
நேற்று காலை பஜார் அருகே கண்ணதாசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த இரண்டு பசு மாடுகள், வீட்டிற்கும், பின்பக்க சுற்றுச்சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டன.
அவற்றை வெளியேற்ற முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின், இரண்டு பசு மாடுகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.
எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.