/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர் காப்பீடு அவகாசம் பிப்., 21 வரை நீட்டிப்பு
/
பயிர் காப்பீடு அவகாசம் பிப்., 21 வரை நீட்டிப்பு
ADDED : பிப் 16, 2024 07:31 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கா.முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டிற்கான, நவரை பருவத்திற்கு, நெல், பச்சை பயறு, எள் ஆகிய பயிர்களுக்கு, காப்பீடு செய்வதற்கான கால அவகாசம், வரும் 21 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எனவே நவரை பருவ நெல், பச்சைப்பயறு மற்றும் எள் சாகுபடி மேற்கொண்டுள்ள கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ - சேவை மையங்களில், பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பொழுது, முன் மொழிவு படிவம், விண்ணப்ப படிவம்,வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் காப்பீட்டு கட்டணமாக, 1 ஏக்கர் நெல் பயறுக்கு 512, பச்சை பயறுக்கு 271, எள் பயறுக்கு 158 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.