/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டைமர்' இல்லாத சிக்னல் சந்திப்பு சாலையை கடப்போர் அச்சம்
/
'டைமர்' இல்லாத சிக்னல் சந்திப்பு சாலையை கடப்போர் அச்சம்
'டைமர்' இல்லாத சிக்னல் சந்திப்பு சாலையை கடப்போர் அச்சம்
'டைமர்' இல்லாத சிக்னல் சந்திப்பு சாலையை கடப்போர் அச்சம்
ADDED : அக் 09, 2025 03:01 AM

ஆவடி, ஆவடி செக்போஸ்ட் சிக்னல் சந்திப்பில், சாலையை கடப்பதற்குள் பாதசாரிகள் பெரும்பாடு படுகின்றனர்.
சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி காமராஜர் சிலை அருகே செக்போஸ்ட் சந்திப்பு உள்ளது.
இங்கு, சென்னை - திருவள்ளூர்; பூந்தமல்லி - சென்னை; திருவள்ளூர் - பூந்தமல்லி மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை என்பதால் எந்நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ளது.
மேலும், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, பல்வேறு வணிக நிறுவனங்கள், கோவில்கள், மசூதி மற்றும் சர்ச்சுகள் உள்ளன.
செக்போஸ்ட் சந்திப்பில், கடந்த 2023ல், பழைய சிக்னல் விளக்குகள் அகற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது.
சிக்னல் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து, 'பெடஸ்ட்ரியன் டைமர்' அதாவது பாதசாரிகள் கடக்க நேரம் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக, 'பீக் ஹவர்' வேளைகளில், பொதுமக்கள், பள்ளி மாணவ - மாணவியர் உயிரை கையில் பிடித்து திக்... திக்கென சாலையை கடக்கின்றனர்.
எனவே, போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், மக்கள் நலன் கருதி, அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், புதிதாக 'ஜீப்ரா கிராசிங்' அமைத்து பாதசாரிகள் கடக்க, 'பெடஸ்ட்ரியன் டைமர்' அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.