/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
/
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
ADDED : மே 05, 2025 01:51 AM
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.
கோடை விடுமுறை முடிந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் அதிகளவில் கூடினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் ஏகவல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத தீமிதி திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, நேற்று மாலை நடந்தது.
முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. 75க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து, தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில், அம்மன் வீதியுலா சென்றார்.