/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
/
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 15, 2025 08:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று பெரியபாளையம் பவானியம்மன் கோவில். நேற்று விடுமுறை நாள் என்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்தனர்.
காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். முன்னதாக, பொங்கல் வைத்து, வேப்ப இலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதன்பின், அனைவரும் அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.