/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுமுறை முடிந்து திரும்பியோரால் ரயில், பஸ் நிலையங்களில் நெரிசல்
/
விடுமுறை முடிந்து திரும்பியோரால் ரயில், பஸ் நிலையங்களில் நெரிசல்
விடுமுறை முடிந்து திரும்பியோரால் ரயில், பஸ் நிலையங்களில் நெரிசல்
விடுமுறை முடிந்து திரும்பியோரால் ரயில், பஸ் நிலையங்களில் நெரிசல்
ADDED : அக் 06, 2025 11:18 PM

தாம்பரம், ஆயுதபூஜை, விஜயதசமி, பள்ளி விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களுக்கு சென்றோர், நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் நுழைந்ததால், சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
நேற்று காலை ஏகப்பட்ட வாகனங்கள் நுழைந்ததால், ஜி.எஸ்.டி., சாலையில் வண்டலுார் முதல் பெருங்களத்துார் வரையிலும், தாம்பரம் - வேளச்சேரி சாலையில் கேம்ப் ரோடு முதல் சேலையூர் வரையிலும், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நெரிசல் காரணமாக, வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன.
அதே போல், மதுரை, திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்பட்ட ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால், தாம்பரம் ரயில் நிலையம் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.
அதேபோல், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் வழக்கத்தை விட நெரிசல் அதிகமாக இருந்தது.
தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் சென்னைக்கு திரும்புவர் என தெரிந்தும், பெருங்களத்துார், தாம்பரம், சேலையூர் உள்ளிட் ட இடங்களில் போதிய போலீசார் பணியமர்த்தப்படாததாலும், போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததாலும், பயணியர் பெரும் அவதிக்குள்ளாகினர்.