/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாசு கொளுத்தி போட்டதால் அரசு பள்ளியில் பொருட்கள் நாசம்
/
பட்டாசு கொளுத்தி போட்டதால் அரசு பள்ளியில் பொருட்கள் நாசம்
பட்டாசு கொளுத்தி போட்டதால் அரசு பள்ளியில் பொருட்கள் நாசம்
பட்டாசு கொளுத்தி போட்டதால் அரசு பள்ளியில் பொருட்கள் நாசம்
ADDED : அக் 06, 2025 11:17 PM
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. காலாண்டு தேர்வு தொடர் விடுமுறைக்கு பின், நேற்று காலை பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது, ஆண் ஆசிரியர்கள் ஓய்வு அறை முழுதும் கருகிய நிலையில், அறை முழுதும் வெடித்த பட்டாசுகள் சிதறி கிடந்தன. விடுமுறை நாட்களின் போது, ஜன்னல் வழியாக ஆசிரியர்கள் அறைக்குள், மர்ம நபர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டது தெரியவந்தது.
இதில், மர பீரோ, மேஜைகள், மின் விசிறிகள், டியூப் லைட்டுகள், தேர்வு விடைத்தாள், பதிவேடுகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்படி, பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.